பிராந்திய செய்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழு

பிராந்திய செய்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழு

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2017 | 7:49 pm

பிராந்திய செய்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயந்து அதற்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து பரிந்துரைகளை சமர்பிப்பதற்கான விசேட குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதியால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் தொழில் ஆணையாளர் நாயகம் ஆகியோர் அடங்கிய குழுவே இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் அறிக்கை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கையளிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பிராந்திய ஊடகவியலாளர்களின் மாதாந்த கொடுப்பனவு தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

மேலும் பிராந்திய ஊடகவியலாளர்கள் எதிர்நநோக்கக்கூடிய ஏனைய பிரச்சினைகள் குறித்தும் ஆராய உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்