தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 122 முறைப்பாடுகள்

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 122 முறைப்பாடுகள்

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 122 முறைப்பாடுகள்

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2017 | 3:09 pm

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 122 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 12 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்திலிருந்தே அதிகப்படியாக 17 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலிருந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பொருட்களை விநியோகித்தமை கட்அவுட்கள் மற்றும் காட்சி பதாகைகள் தொடர்பிலான முறைப்பாடுகளே அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறிய முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தல் தொடர்பிலான பொலிஸ் நடவடிக்கைப் பிரிவிற்கும் 32 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தேர்தலுடன் தொடர்புடைய 93 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலான 89 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெப்ரல் எனப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்