கேப்பாப்புலவில் படையினர் வசமுள்ள 133 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு

கேப்பாப்புலவில் படையினர் வசமுள்ள 133 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2017 | 7:35 pm

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் படையினர் வசமுள்ள 133 ஏக்கர் காணி நாளை விடுவிக்கப்படவுள்ளது.

அதற்கான வைபவம் நாளை காலை நடைபெறவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

கேப்பாப்புலவில் படையினர் வசமிருந்த காணியை விடுவிப்பதற்கு 148 மில்லியன் ரூபா கோரப்பட்டது.

இந்த நிதியை மீள்குடியேற்ற அமைச்சினூடாக வழங்கியதை அடுத்து காணியை விடுவிக்க பாதுகாப்பு படையினர் இணக்கம் தெரிவித்ததாக மீள்குடியேற்ற அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுவிக்கப்படவுள்ள கேப்பாப்புலவு காணியில் அடுத்த வருடம் 85 குடும்பங்களை மீள்குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமது பூர்வீக காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் சுமார் 290 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்