களுவாஞ்சிக்குடியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

களுவாஞ்சிக்குடியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

களுவாஞ்சிக்குடியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2017 | 3:31 pm

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு தரப்பினரிடைய ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் பெரியகல்லாறு முதலாம் குறிச்சியைச் சேர்ந்த 23 வயதுடைய ஜேசுதாசன் திமேசன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

சம்பம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சுக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சுக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்