அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான 129 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான 129 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான 129 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2017 | 3:20 pm

அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட 129 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவியுயர்வு பெற்றுக்கொடுக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அமைச்சரவையின் ஆலோசனைக்கமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தற்பொழுது ஓய்வு பெற்றுள்ள 29 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவியுயர்வை பெற்றுக் கொடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அத்தியட்சகர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகிய பதவிகளுக்கு இந்த பதவியுயர்வுகள் வழங்கப்படவுள்ளன.

பதவியுயர்வுகளுடன் அதற்குரிய ஓய்வூதியம் கிடைக்கப்பெற்றாலும் அவர்கள் பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள்.

இதற்கு மேலதிகமாக அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட, தற்போது கடைமையில் உள்ள 100 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பதவியுயர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்