ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்க கிடைத்த நிதி மத்திய வங்கிக் கணக்கில்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்க கிடைத்த நிதி மத்திய வங்கிக் கணக்கில்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2017 | 7:48 pm

ஹம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கைகளை சீன நிறுவனமொன்றுக்கு கையளிப்பதற்காக அரசாங்கத்திற்கு கிடைக்கவேண்டிய 292.1 மில்லியன் அமெரிக்க டொலர் தமது கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை மற்றும் வரையறுக்கப்பட்ட சீனா மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்ட்டிங்ஸ் ஆகியவற்றிற்கிடையில் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் இந்த நிதி இலங்கைக்கு கிடைத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சார்பில் மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் ஐக்கிய இராஜிய டொலர் கணக்கிற்கு அந்த பணத்தை மாற்றியதாக இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்