தீர்வின்றித் தொடரும் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை

தீர்வின்றித் தொடரும் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2017 | 8:04 pm

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை இந்த வருடமும் தீர்வின்றி தொடர்கின்றது.

இந்தப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை காண்பதற்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார்.

வடபகுதி கடற்பரப்புக்களுக்கு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் ஆண்டு தோறும் பெருமளவில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.

இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த படகுகளில் அநேகமானவை கடற்றொழில் அமைச்சின் தலையீட்டினை அடுத்து விடுவிக்கப்பட்டன.

ஏற்கனவே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் வடக்கு கடற்பரப்பில் தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

இந்த வருடத்திலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தப் போது கைது செய்யப்பட்டிருந்தனர்.

08.08.2017
இலங்கையின் வடபகுதி கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்த சுமார் 40 இற்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கைது.

22.08.2017
நாட்டின் கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 52 இந்திய மீனவர்கள் கைது.

31.08.2017
சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 76 இந்திய மீனவர்கள் விடுதலை.

02.12.2017
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 20 மீனவர்கள் கைது.

இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் காரணமாக நாட்டின் மீன் வளம் அழிவடையும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைக்கான தீர்வு எப்போது சாத்தியப்படப்போகின்றது.

இது தொடர்பில் இன்று நாம் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் வினவினோம்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்