ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் நத்தார் தின வாழ்த்துச் செய்திகள்

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் நத்தார் தின வாழ்த்துச் செய்திகள்

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2017 | 2:41 pm

ஏனையவர்களின் மீது காட்டும் இரக்கம், கருணை ஆகியனவே வெற்றியை தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நத்தார் தின வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஏனையவர்களின் மீது காட்டும் இரக்கம், கருணை ஆகியனவே வெற்றியை தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் விடை காண முடியும் என்பதை இயேசு கிறிஸ்து உணர்த்தியதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதியால் வௌியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித நேயத்திற்கு எதிராக எழுந்து நிற்கும் சகல ஆயுதங்களையும் மௌனிக்கச் செய்து அமைதியின் பாதையில் எதிர்காலத்தை பிரகாசமடையச் செய்ய இத்தகைய பயணப்பாதையில் பயணிப்பதன் மூலமே இயலுமானமாக அமையும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சமாதானத்தின் மைந்தன் என அழைக்கப்படும் இயேசுநாதரின் பிறப்பு நிகழ்ந்த நத்தார் தினத்தைக் கொண்டாடும் நாம் சமாதானத்தின் ஊடாகவே இந்த நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்க முடியும் என என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நல்ல விடயங்களால் உள்ளங்களை நிரப்பி, சிறந்த மனிதர்களாக சமூகத்தை வளப்படுத்துவதனையே அனைவரும் நோக்கமாகக் கொள்ளவேண்டும் என பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நத்தார் தின ஔியானது நம்பிக்கையிழந்து வாழும் மக்களின் மனங்களில் நம்பிக்கையும் சமாதானத்தையும் மீள் உயிர்ப்பிப்பதாக அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நத்தார் பண்டிகையானது இயேசு கிறிஸ்து வௌிக்காட்டிய தாழ்மை, அன்பு,பிறரை நேசித்தல்,மற்றும் தியாகம் போன்ற பண்புகளை மீள நினைவு கூர்வதாக எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிறரை நேசித்தல், உண்மை, சமத்துவம், மறறும் சமூக நீதி போன்றவை தொடர்பில் இயேசு கிறிஸ்துவின் போதனைகளானது இன்றும் எமது சமூகங்களுக்கு தொடர்புடையதாக காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

நத்தார் பண்டிகை காலங்களை வசதியற்று இயலாமையால் உள்ள சக மக்கள் மீதான எமது கரிசனையை வௌிக்காட்டும் காலங்களாக அனுஷ்டிக்குமாறு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்