சொந்த நாட்டை விட்டு பிற நாடுகளில் குடியேறியவர்களைப் புறக்கணிக்க வேண்டாம் – பாப்பரசர்

சொந்த நாட்டை விட்டு பிற நாடுகளில் குடியேறியவர்களைப் புறக்கணிக்க வேண்டாம் – பாப்பரசர்

சொந்த நாட்டை விட்டு பிற நாடுகளில் குடியேறியவர்களைப் புறக்கணிக்க வேண்டாம் – பாப்பரசர்

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2017 | 2:16 pm

சொந்த நாட்டை விட்டு பிற நாடுகளில் குடியேறியவர்களைப் புறக்கணிக்க வேண்டாம் என உலக நாடுகளை பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மரியாள் மற்றும் சூசையப்பர் நாசரெத்திலிருந்து பெத்தலகேமுக்கு பயணித்தமையையை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தலைமையில் நடைபெறும் , 5 ஆவது நத்தார் நள்ளிரவு ஆராதனை வாத்திக்சகானின் சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில் உள்ள basilica தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

பல்லாயிரக் கணக்காணவர்கள் கலந்து கொண்ட திருப்பலியில் , உலக வாழ் கிருஸ்தவர்களுக்கு பாப்பரசர் பிரான்ஸிஸ் தமது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய அவர், சொந்த நாட்டை விட்டு பிற நாடுகளில் குடியேறியவர்களைப் புறக்கணிக்க வேண்டாம் என உலக நாடுகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதே போன்று உலக நாடுகள் பலவற்றிலும் நத்தார் நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்