ஏழு அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு நிர்ணய விலை

ஏழு அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு நிர்ணய விலை

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2017 | 7:50 pm

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 7 அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கான நிர்ணய விலையை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு அறிவித்துள்ளது.

சம்பா அரிசி கிலோகிராமுக்கு 71 ரூபாவும் , நாட்டரிசி ஒரு கிலோகிராமுக்கு 74 ரூபாவும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 135 ரூபாவும் நிர்ணய விலையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் சீனிக்கான நிர்ணய விலை 100 ரூபாவாகும்.

உருளைக் கிழங்கு ஒரு கிலோகிராமின் நிர்ணய விலை 139 ரூபா எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இதனைத் தவிர 425 கிராம் ரின்மீனுக்கான நிர்ணய விலை 127 ரூபாவாகவும், பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 124 ரூபாவாகவும் நெத்தலி ஒரு கிலோகிராமின் விலை 515 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்ணய விலையின் கீழ், லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் பல்பொருள் விற்பனை அங்காடிகளிலும் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சம்பா மற்றும் வௌ்ளையரிசியின் விலையில் தளம்பல் ஏற்பட்டால் அந்த அரிசிகளுக்கும் நிர்ணய விலை அறிவிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த நிர்ணய விலைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை அமுல்படுத்த வாழ்க்கைச் செலவு குழு பரிந்துரைத்துள்ளது.

நிர்ணய விலையை விட கூடுதலான விலைக்கு உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் வகையில் தேடுதல்களில் ஈடுபட நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்