ஶ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழு ஜனவரியில் ஸ்தாபிப்பு

ஶ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழு ஜனவரியில் ஸ்தாபிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2017 | 8:14 pm

ஸ்ரீ லங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா விமான சேவை என்பவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவை ஜனவரி முதல் வாரத்தில் ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடுவலையில் இன்று (24) நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரைாயற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

”வெற்றி பெறும் கடுவலை போராட்டத்தை ஆரம்பிப்போம்” எனும் தொனிப்பொருளில் இந்த மக்கள் சந்திப்பு நடைபெற்றது.

எத்தகைய சவால் வந்தாலும் தூய்மையான அரசியலை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்பை கைவிடப்போவதில்லை என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்