யாழ். தீவகம் தம்பாட்டி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். தீவகம் தம்பாட்டி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். தீவகம் தம்பாட்டி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2017 | 3:52 pm

யாழ். தீவகம் தம்பாட்டி மீனவர்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தம்பாட்டி பகுதியிலுள்ள மீனவர்களின் வேண்டுகோளுக்கு அமைய பிரதே சபையினால் அங்கு மரக்கறி சந்தையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரக்கறி சந்தையை தற்போது மீன்சந்தையாக மாற்றுவதற்கான நடவடிக்கை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தம்பட்டி மீனவ சங்கத்திற்குபட்ட தொழிலாளர்கள் இறங்குதுறை வரியாக 1 கிலோ இறாலுக்கு 25 ரூபா வரி செலுத்தப்பட வேண்டும் எனவும் பிரதேச சபையினால் அறிவுறுததப்பட்டுள்ளது.

இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மீனவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்