உக்கக்கூடிய பொலித்தீன் உற்பத்தி மூலப்பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்க தீர்மானம்

உக்கக்கூடிய பொலித்தீன் உற்பத்தி மூலப்பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்க தீர்மானம்

உக்கக்கூடிய பொலித்தீன் உற்பத்தி மூலப்பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2017 | 3:12 pm

உக்கக்கூடிய பொலித்தீன் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு வரிச்சலுகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் அஜித் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

உக்கக்கூடிய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தேவையான இயந்திரங்களுக்கான வரிச்சலுகை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை உக்கும் பொலித்தீன் உற்பத்தியை பரிசோனை செய்வதற்கு இலங்கை தரநிர்ணய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆய்வுகளின் பின்னர், குறித்த நிறுவனங்கள் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக பதில் பணிப்பாளர் நாயகம் நயனா சமரசிங்க தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்