இம்முறை தேர்தலிலும் அரசியல் வாரிசுகள் களத்தில்

இம்முறை தேர்தலிலும் அரசியல் வாரிசுகள் களத்தில்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2017 | 8:18 pm

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் அரசியல் வாரிசுகள் பலர் களமிறங்குகின்றனர்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ்வின் இரண்டு புதல்வர்கள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதாவுல்லாஹ் அஹமட் சகி மற்றும் அதாவுல்லாஹ் டில்ஷான் ஆகியோர் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தேசிய காங்கிரஸில் போட்டியிடுகின்றனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் ஆராஅமுதன் வலி வடக்கு பிரதேச சபைக்கான தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

வட மாகாண சபை உறுப்பினர் ப. சத்தியலிங்கத்தின் சகோதரர் ப.சத்தியாநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு போட்டியிடுகிறார்.

மாத்தளை மாவட்டம் ரத்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சி. சுகுமாரின் மகன் எஸ்.நிரூஷன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ரத்தோட்டை பிரதேச சபைக்கு போட்டியிடுகிறார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஐ.எம் இல்யாஸின் மகள் இல்யாஸ் பாத்திமா ஜெமீலா புத்தளம் நகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் பிரதி அமைச்சர் வீ.புத்திரசிகாமணியின் மகள் யதர்சனா புத்திரசிகாமணி ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நுவரெலியா மாநகர சபைத்தேர்தலில் போட்டியிடுகின்றார்

மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்த சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேராவின் மகன் லலித் பெரேரா ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பண்டாரகம பிரசேதச சபைத்ததேர்தலில் களமிறங்கியுள்ளார்.

வடமத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அனில் ரத்நாயக்கவின் மகன் துசித் பிரதீப் ஜனங்ஜய இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தலாவ பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்