ஶ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை தொடர்பில் ஆராய புதிய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் 

ஶ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை தொடர்பில் ஆராய புதிய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் 

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2017 | 5:00 pm

முறிகள் மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்ததன் பின்னர் ஶ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை தொடர்பில் ஆராய்வதற்கு புதிய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில அமைப்பாளர்களுடன் நேற்று (22) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும், தூய அரசியலை முன்னெடுப்பதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தூய அரசியலை முன்னெடுப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்காது நாட்டை நேசிக்கும் அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரசியல் பலம், பணபலம் மற்றும் அதிகார பலம் என்பன இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றி பெறாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி , புதிய தேர்தல் முறையூடாக புத்திஜீவிகள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்