பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மேலதிக பஸ்கள் சேவையில்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மேலதிக பஸ்கள் சேவையில்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மேலதிக பஸ்கள் சேவையில்

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2017 | 3:09 pm

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவத்து சபை தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுமார் 150 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரதி முகாமையாளர் பி.எச்.ஆர்.டி சந்திரசிறி குறிப்பிட்டார்.

பண்டிகைக் காலம் நிறைவடையும் வரையில் இந்த பஸ் சேவைகள் இடம்பெறும் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகைக் காலத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்ப்டடுள்ளன.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையான விசேட ரயில் சேவைகள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்