சந்திரிகாமம் வனப்பகுதியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டவர் உயிரிழப்பு

சந்திரிகாமம் வனப்பகுதியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டவர் உயிரிழப்பு

சந்திரிகாமம் வனப்பகுதியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2017 | 8:45 pm

டயகம சந்திரிகாமம் வனப்பகுதியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டயகம வெஸ்ட் முதலாம் பிரிவு தோட்டத்தில் இருந்து விறகு சேகரிப்பதற்காக சென்றவர் இன்று காலை காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று காலை தனது வீட்டில் இருந்து சந்திரிகாமம் வனப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக குறித்த நபர் சென்றுள்ளார்.

நேற்று மாலை வரை வீடு திரும்பாததை அடுத்து டயகம பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்றிரவு முதல் பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது குழியொன்றுக்குள் இருந்து பலத்த காயங்களுடன் நபர் மீட்கப்பட்டுள்ளார்.

2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்