2017 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட அணியாக ஜெர்மனி தெரிவு

2017 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட அணியாக ஜெர்மனி தெரிவு

2017 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட அணியாக ஜெர்மனி தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

22 Dec, 2017 | 5:09 pm

2017 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட அணியாக நடப்பு சாம்பியனான ஜெர்மனி தெரிவாகியுள்ளது.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஓராண்டில் அணிகள் வெளிப்படுத்தும் ஆற்றல்களுக்கு அமைவாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தரவரிசைப் பட்டியலைத் தயாரித்து வருகிறது.

அதற்கமைய, இந்த வருடத்திற்கான தரவரிசையில் நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த வருடம் ஜெர்மனி விளையாடிய 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தரவரிசையில் பிரேஸில் இரண்டாமிடத்தையும் போர்த்துக்கல் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.

211 அணிகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இலங்கை 200 ஆம் இடத்தில் உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்