வேட்பு மனுத் தாக்கல் நண்பகலுடன் நிறைவு

வேட்பு மனுத் தாக்கல் நண்பகலுடன் நிறைவு

வேட்பு மனுத் தாக்கல் நண்பகலுடன் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

21 Dec, 2017 | 9:58 am

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.

நண்பகல் 12 மணியின் பின்னர் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனு தாக்கலின் பின்னர் பேரணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நேற்று நண்பகலுடன் நிறைவுக்கு வந்தது.

அதற்கமைய 1652 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை  குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 497 வேட்புமனுக்கள் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டன.

பல்வேறு காரணங்களால் அவற்றில் 23 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெப்ரவரி பத்தாம் திகதி நடைபெறும் எனவும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்ல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்