2010-இல் மல்லாவியில் இளைஞர் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

2010-இல் மல்லாவியில் இளைஞர் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

By Bella Dalima

07 Dec, 2017 | 7:51 pm

2010 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி கிளிநொச்சி- மல்லாவியில் 28 வயதான வேலுப்பிள்ளை சசிரூபன் என்பவர் கொலை செய்யப்பட்டு, கல்லில் கட்டி கிணற்றினுள் போடப்பட்டிருந்தார்.

இந்த கொலை வழக்கின் குற்றவாளிக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குற்றவாளிக்கு இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இதேவேளை, சம்பவத்தின் இரண்டாவது சந்தேகநபர் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்து, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.