கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 8,095 மீட்டர் நீள திருமண ஆடை

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 8,095 மீட்டர் நீள திருமண ஆடை

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 8,095 மீட்டர் நீள திருமண ஆடை

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2017 | 4:54 pm

பிரான்ஸ் நாட்டில் மணப்பெண்ணுக்கு 8,095 மீட்டர் நீளத்தில் தயாரிக்கப்பட்டுள்ள திருமண ஆடை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த உடையை ஒரு கட்டுமான நிறுவனம் உருவாக்கியது. அதை 15 தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் 2 மாதங்களாக வடிவமைத்தனர்.

இத்திருமண உடை முந்தைய கின்னஸ் சாதனையைத் தகர்த்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு 1203.9 மீட்டர் நீள திருமண உடை தயாரிக்கப்பட்டது. தற்போது அதை விட மிக நீளமாக உருவாக்கப்பட்ட இந்த உடை புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மிக நீளமாக இருக்கும் இந்த உடை பல துண்டுகளாக வெட்டி எடுக்கப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. அதில் இருந்து கிடைக்கும் பணம் அறக்கட்டளை நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

1 2


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்