வௌியீட்டுக்கு தயாராகும் ‘இமைக்கா நொடிகள்’

வௌியீட்டுக்கு தயாராகும் ‘இமைக்கா நொடிகள்’

வௌியீட்டுக்கு தயாராகும் ‘இமைக்கா நொடிகள்’

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2017 | 12:08 pm

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் `இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `இமைக்கா நொடிகள்’.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

மேலும் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மறுபுறத்தில் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் அடுத்த ஆண்டு ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்