வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சுமார் 100 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன

வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சுமார் 100 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன

வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சுமார் 100 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2017 | 6:34 am

வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சுமார் 100 தனியார் பஸ்கள் கொழும்பிலிருந்து தூர பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் பயணிக்கும் பஸ்களில் சுமார் 30 பஸ்கள் வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடுவதாக சபையின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வீதி மார்க்கத்தில் அமைந்துள்ள சில பொலிஸ் நிலையங்களின் உதவியுடன், சாரதிகள் வீதி அனுமதிப்பத்திரமின்றி பயணிப்பமதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், வீதி அனுமதி பத்திரமின்றி இயங்கும் பஸ்களை சுற்றிவளைப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்