ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்தின் 4 பீடங்கள் மூடப்பட்டுள்ளன

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்தின் 4 பீடங்கள் மூடப்பட்டுள்ளன

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்தின் 4 பீடங்கள் மூடப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2017 | 11:13 am

மாணவர்களிடையே பரவி வரும் ஒருவகை வைரஸ் காய்ச்சல் காரணமாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்தின் 4 பீடங்கள் மூடப்பட்டுள்ளன.

முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம், தொழிநுட்ப பிரிவு உள்ளிட்ட 4 பீடங்கள் மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் சமூகமளிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக துணைவேந்தர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்