முதன்முறையாக லண்டன் பிஷப் பொறுப்பிற்கு பெண் நியமனம்

முதன்முறையாக லண்டன் பிஷப் பொறுப்பிற்கு பெண் நியமனம்

முதன்முறையாக லண்டன் பிஷப் பொறுப்பிற்கு பெண் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2017 | 4:09 pm

மிகப்பழமையான கிறித்தவப் பிரிவான சர்ச் ஆஃப் இங்கிலாந்து முதன்முறையாக லண்டன் பிஷப் பொறுப்பிற்கு சாரா முல்லாலி என்ற பெண்ணை நியமித்துள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்த்தவத்திலிருந்து பிரிந்து 1934 ஆம் ஆண்டில் தனியாக சர்ச் ஆஃப் இங்கிலாந்து (Church of England) என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதல் சர்ச் ஆஃப் இங்கிலாந்து அமைப்பு பெண் மதப் போதகர்களை நியமித்து வருகிறது.

2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பெண் பிஷப் நியமிக்க முடிவு செய்யப்பட்ட போது, அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அம்முடிவு தோல்வியில் முடிந்தது.

ஆனால், பழமைவாதிகளின் எதிர்ப்பு காரணமாக பிஷப் பொறுப்பிற்கு பெண்களை நியமிக்க முடியாமற்போனது.

133 ஆவது பிஷப்பாக நியமிக்கப்பட்டுள்ள சாரா, இதற்கு முன்னதாக தலைமை செவிலியராகப் பணியாற்றியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு தலைமை செவிலியராக சாரா நியமிக்கப்பட்ட போது, மிகக்குறைந்த வயதில் அப்பொறுப்புக்கு வந்தவர் என்ற பெயரைப் பெற்றிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்