மருந்துப் பொருட்களின் விலை 5 வீதத்தால் அதிகரிப்பு

மருந்துப் பொருட்களின் விலை 5 வீதத்தால் அதிகரிப்பு

மருந்துப் பொருட்களின் விலை 5 வீதத்தால் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2017 | 6:28 pm

மருந்துப் பொருட்களின் விலையை 5 வீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், உலக சந்தையில் மருந்துப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், இறக்குமதியாளர்களுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மருந்துகளின் விலையை அதிகரிக்க நேர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஔடதங்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் வர்த்தக சங்கம் என்பனவற்றின் கோரிக்கைக்கு அமைய தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், ஔடதங்களின் விலையை 5 வீதத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, ஒரு வருடத்திற்கு இந்த விலை அதிகரிப்பு செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் உலக சந்தையில் மருந்துகளின் விலை அதிகரிக்கப்பட்டாலும், இலங்கையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி 48 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்