பண்டிகைக் காலத்தை முன்னிட்டு லங்கா சதொசவில் உணவுப்பொருட்களின் விலை குறைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு லங்கா சதொசவில் உணவுப்பொருட்களின் விலை குறைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு லங்கா சதொசவில் உணவுப்பொருட்களின் விலை குறைப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2017 | 6:40 am

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு லங்கா சதொசவில் உணவுப்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் உள்ள 372 சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 65 ரூபாவாக இருந்த வௌ்ளை பச்சை அரிசி 62 ரூபாவாகவும், நாட்டரிசி 74 ரூபாவில் இருந்து 70 ரூபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலைப்பட்டியலுக்கு அமைய சீனி கிலோவொன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

பெரிய வெங்காயம் கிலோவொன்று 152 ரூபாவிலிருந்து 135 ரூபாவாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்