தனியார் கம்பனியில் பண மோசடி: முகாமையாளருக்கு விளக்கமறியல்

தனியார் கம்பனியில் பண மோசடி: முகாமையாளருக்கு விளக்கமறியல்

தனியார் கம்பனியில் பண மோசடி: முகாமையாளருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2017 | 7:07 pm

இலங்கை பண்ணை மற்றும் மீன்பிடி உற்பத்தி ஊக்குவிப்பாளர் தனியார் கம்பனி என்ற நிறுவனத்தினூடாக மக்களின் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வவுனியா – பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பண்ணை மற்றும் மீன்பிடி உற்பத்தி ஊக்குவிப்பாளர் தனியார் கம்பனியில் முதலீடு செய்த பணத்தினை தமக்கு மீள வழங்குமாறு கோரி மக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

இதனை அடுத்து, குறித்த தனியார் கம்பனியின் முகாமையாளராக செயற்பட்ட நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய பகுதிகளில் மக்களிடம் இலட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் 50 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்