கிராமங்கள் தோறும், குளங்கள் தோறும்: அநுராதபுரம் தூம்பிக்குளம் தொடர்பில் ஆய்வு

கிராமங்கள் தோறும், குளங்கள் தோறும்: அநுராதபுரம் தூம்பிக்குளம் தொடர்பில் ஆய்வு

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2017 | 9:07 pm

பண்டைக்கால நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் தொடர்பில் இளம் சமூகத்திற்கு தௌிவுபடுத்தும் நோக்கில் நியூஸ்பெஸ்ட் முன்னெடுக்கும் மக்கள் சக்தி – கிராமங்கள் தோறும், குளங்கள் தோறும் திட்டத்தின் மூன்றாம் நாள் இன்றாகும்.

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் நீர்ப்பாசன தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டத்தினை நியூஸ்பெஸ்ட் முன்னெடுத்துள்ளது.

கடந்த 2 நாட்களைப் போன்று இன்றும் பெல்லன்கடவல, எல்லங்கா கட்டமைப்பின் மூன்று குளங்களை நியூஸ்பெஸ்ட் குழுவினர் கண்காணித்தனர்.

எல்லங்காய் எனப்படும் ஒன்றிணைந்த குளங்களின் தொகுதி தொடர்பில் நியூஸ்பெஸ்ட் மேற்கொள்ளும் மக்கள் சக்தி – கிராமங்கள் தோறும், குளங்கள் தோறும் செயற்றிட்டத்தின் முக்கிய கட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

அனுராதபுரம் மாவட்டத்தின் கல்கடவெல பகுதியில் அமையப்பெற்றுள்ள இந்தக்குளம் தூம்பிக் குளம் என அறியப்படுகின்றது.

வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ள மகாசேனன் மற்றும் துட்டகைமுனு ஆகிய இரு மன்னர்களது காலப்பகுதியில் இந்தக்குளம் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மகாசேனன் இதனை இறுதியாகக் கட்டுவிக்க தீர்மானித்தமையினால் இது தீந்து குளம் என அறியப்படுவதாக நம்பப்படுகின்றது.

வீரம் பொருந்திய எல்லாள மன்னனுடன் போரிட துட்டகைமுனு தீர்மானித்த இடமாகவும் இது கருதப்படுவதால், இந்தப் பெயர் பெற்றிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.

தீந்துக்குளம் என்ற பெயர் இன்று திரிவடைந்து தூம்பி வெவ என்ற பெயரில் அழைக்கப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்