கித்துல் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு: அனுமதி கோரும் பிரதேச மக்கள்

கித்துல் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு: அனுமதி கோரும் பிரதேச மக்கள்

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2017 | 7:27 pm

மணல் அகழ்விற்கான அனுமதி தமக்கு தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதாக, மட்டக்களப்பு – கித்துல் பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கித்துல் பகுதியிலுள்ள 50-க்கும் மேற்பட்டவர்கள் மணல் அகழ்விற்காக விண்ணப்பித்துள்ளனர்.

எனினும், கடந்த சில வருடங்களாகவே தமக்கான அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக இவர்கள் குறிப்பிட்டனர்.

வௌிப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவர்கள் 200-க்கும் அதிக கியூப் மணலை அகழ்ந்து செல்வதாக கித்துல் பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

எனினும், பிரதேசத்தைச் சேர்ந்த மூவருக்கு மாத்திரமே 50 கியூப் மணலை அகழ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.

கித்துல் பகுதி மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் ஏறாவூர்பற்று – செங்கலடி பிரதேச செயலாளரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

2015 ஆம் ஆண்டிற்குப் பின்னர் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும், வழங்கக்கூடிய அதிகூடிய அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், கித்துல் பிரதேசத்தைச் சேர்ந்த ஓரிருவருக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் ஏறாவூர்பற்று – செங்கலடி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்