English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
19 Dec, 2017 | 6:06 pm
இலங்கை – இந்தியா இடையிலான முதல் T20 கிரிக்கெட் போட்டி நாளை (20) கட்டாக்கில் நடைபெறவுள்ளது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடு வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் நாளை நடைபெறுகிறது.
இந்திய அணி வீரர் விராட் கோஹ்லி தனது திருமணத்தை அடுத்து ஓய்வில் உள்ளதால் T20 தொடருக்கும் ரோஹித் சர்மாவே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி T20 தொடரையாவது வெல்லும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.
இதற்கென இலங்கை அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை அணியில் திசர பெரேரா (தலைவர்), உபுல் தரங்க, அஞ்சலோ மெத்யூஸ், குஷால் பெரேரா, தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் டிக்வெல்ல, அசேல குணரத்ன, சதீர சமரவிக்ரம, தசுன் ஷானக்க, சதுரங்க டி சில்வா, சஜித் பத்திரன, தனஞ்செய டி சில்வா, நுவன் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ, துஸ்மந்த சமீர ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணியில் ரோஹித் சர்மா (தலைவர்), லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், டோனி, ஹர்த்திக் பாண்டியா, மனிஷ் பாண்டே, குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், பும்ரா, தீபக் ஹூடா, பசில் தம்பி, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
28 Jan, 2021 | 11:43 AM
27 Jan, 2021 | 01:54 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS