காட்டு யானைகளின்  பரம்பல் தொடர்பிலான கணக்கெடுப்பை மேற்கொள்ள தீர்மானம்

காட்டு யானைகளின் பரம்பல் தொடர்பிலான கணக்கெடுப்பை மேற்கொள்ள தீர்மானம்

காட்டு யானைகளின் பரம்பல் தொடர்பிலான கணக்கெடுப்பை மேற்கொள்ள தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2017 | 3:56 pm

நாட்டில் உள்ள காட்டு யானைகளின் பரம்பல் மற்றும் எண்ணிக்கை தொடர்பிலான கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

2010 ஆம் ஆண்டிற்கு பின்னர் தேசிய அளவில் யானைகள் தொடர்பிலான கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படவில்லை என வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அடுத்த வருடம் தேசிய அளவில் யானைகள் தொடர்பிலான கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இந்த கணக்கெடுப்பின் மூலம் யானைகளின் பரம்பல் தொடர்பில் மேலும் அவதானம் செலுத்த முடியும் எனவும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்