உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2017 | 2:39 pm

248 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்களை கையளிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார்.

இதேவேளை வாக்காளர்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் தேசிய அடையாள அட்டைகள் இன்றி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர், தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பிரசார நடவடிக்கைகளுக்காக பொலித்தீன் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிரசார நடவடிக்கைகளுக்கு பொலித்தீன் பயன்படுத்துவதை தடை செய்துள்ளதாக கட்சி செயலாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பொலித்தீன் அலங்காரங்களை உடனடியாக அகற்றுவதற்கும் மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

வேட்பு மனுக்கள் கோரப்பட்டதன் பின்னர், பொலித்தீன் பாவனை குறித்து சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்