செயற்கைத்தனம் இல்லாத பெண் கிடைத்தால் உடனே திருமணம் செய்துகொள்வேன்: பிரபாஸ்

செயற்கைத்தனம் இல்லாத பெண் கிடைத்தால் உடனே திருமணம் செய்துகொள்வேன்: பிரபாஸ்

செயற்கைத்தனம் இல்லாத பெண் கிடைத்தால் உடனே திருமணம் செய்துகொள்வேன்: பிரபாஸ்

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2017 | 6:21 pm

பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ் தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மனம் திறந்திருக்கிறார்.

பாகுபலி நாயகன் பிரபாசும் நாயகி அனுஷ்காவும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று பேசப்பட்டது.

ஆனால் அதை இருவரும் மறுத்துவிட்டனர். என்றாலும் அந்த எதிர்பார்ப்பு நீடிக்கிறது.

இந்த நிலையில், தனது எதிர்கால மனைவி பற்றி கூறியுள்ள பிரபாஸ், “எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை. எனக்கு அழகான பெண் வேண்டும் என நான் விரும்பவில்லை. செயற்கைத் தனம் இல்லாத நல்ல குணம் கொண்ட பெண் தான் முக்கியம். அதுபோன்ற பெண் கிடைத்தால் உடனே திருமணம் செய்து கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்