இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 

By Bella Dalima

06 Dec, 2017 | 10:07 pm

இந்தியாவின் உத்தராகண்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர பிரயாக் பகுதியில் இன்று இரவு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.

கிழக்கு டெஹ்ராடூனில் இருந்து 121 கி.மீ தொலைவிலும், கடலில் 30 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் நில அதிர்வு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.