மண்சரிவு அபாயத்தால் வௌியேற்றப்பட்ட தோட்ட மக்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில்

மண்சரிவு அபாயத்தால் வௌியேற்றப்பட்ட தோட்ட மக்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில்

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2017 | 8:20 pm

வெலிமடை மற்றும் ஹல்தும்முல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஒஹிய, உடவேரிய, லைபோன் தோட்டங்களின் மக்கள் மண்சரிவு அபாயம் காரணமாக குடியிருப்புக்களில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்காலிகமாகத் தங்குவதற்காக பிரதேசத்தில் கைவிடப்பட்ட தேயிலை தொழிற்சாலையொன்று வழங்கப்பட்டுள்ள போதிலும், அங்கு எவ்வித வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர்.

அண்மையில் பெய்த கடும் மழையை அடுத்து, ஏற்பட்ட அபாயம் காரணமாக ஒஹிய, உடவேரிய, லைபோன் தோட்டங்களின் 120 குடும்பங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வௌியேற்றப்பட்டனர்.

இவர்கள் கடந்த ஒரு வார காலமாக குறித்த தேயிலைத் தொழிற்சாலையில் தங்கியுள்ளனர். மேலும் சிலர் பாடசாலையிலும் தோட்ட ஊழியர் வீட்டிலும் தங்கியுள்ளனர்.

சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தேயிலைத் தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள போதிலும், தொழிற்சாலைக்குள்ளேயே கூடாரங்களை அமைத்து எவ்வித அடிப்படை வசதியுமற்ற நிலையில் வாழ வேண்டிய இக்கட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்