இலங்கையின் குளங்களுக்கு புத்துயிரூட்ட மக்கள் சக்தியுடன் கைகோர்க்கும் பேராதனை பல்கலைக்கழகம்

இலங்கையின் குளங்களுக்கு புத்துயிரூட்ட மக்கள் சக்தியுடன் கைகோர்க்கும் பேராதனை பல்கலைக்கழகம்

இலங்கையின் குளங்களுக்கு புத்துயிரூட்ட மக்கள் சக்தியுடன் கைகோர்க்கும் பேராதனை பல்கலைக்கழகம்

எழுத்தாளர் Bella Dalima

08 Dec, 2017 | 5:20 pm

இலங்கையின் குளங்களுக்கு புத்துயிரூட்ட பேராதனை பல்கலைக்கழகமும் மக்கள் சக்தியும் கைகோர்த்துள்ளன.
புராதன அடுக்கு முறை குளக்கட்டமைப்பு செயற்படுத்தப்பட்டமை குறித்த ஒன்றிணைந்த ஆய்வு

இலங்கையின் உலர் வலய புராதன அடுக்குமுறை குளக்கட்டமைப்பு தொடர்பான விரிவான கள ஆய்வு ஒன்றை, பேராதனை பல்கலைக்கழகத்துடன் இணைந்து நியூஸ்பெஸ்ட்டின் கிராமிய அபிவிருத்தி திட்டமான மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளது.

“குளங்கள் தோறும்” திட்டத்தின் முதற்கட்டமாக மல்வத்து ஓயாவை அடிப்படையாகக் கொண்ட பெல்லன்கடவல மற்றும் பளுகஸ்வெவ ஆகிய குளக்கட்டமைப்பு குறித்த கள ஆய்வு இம்மாதம் 17ஆம் திகதி (17.12.2017) ஆரம்பமாகவுள்ளது.

பண்டைய இலங்கையின் நீர் நிலைகளை மையப்படுத்திய நாகரீகம் உலகளாவிய ரீதியில் சிறந்த ஓர் கட்டமைப்பு என்ற அங்கீகாரத்தினைப் பெற்றிருந்தது.

மிகவும் நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருந்த சிறுகுளங்களின் வலையமைப்பு, கால்வாய்கள் மற்றும் பாரிய நீர் நிலைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை மக்களுக்கு பயன்பாட்டை வழங்கி வந்த நிலையில், கடந்த நுற்றாண்டு காலத்தில் அல்லது அதற்கு பின்னரான காலப் பகுதியிலேயே அழிவிற்கு உள்ளாகியுள்ளது.

இலங்கையின் சிறிய குளங்களின் கட்டமைப்பு அழிவடைந்தமையானது நீர் முகாமைத்துவம், தேக்கி வைத்தல் மற்றும் மீள் விநியோகம் என்பவற்றில் பாரிய தாக்கங்களை செலுத்தியுள்ளது.

இதன் காரணமாக இன்று நாடு வறட்சியாலும் வௌ்ளப்பெருக்காலும் பாதிக்கப்படுவதுடன், நீர் வளத்தினை பாதுகாப்பதிலும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது.

முறையான நீர்வழங்கல் இன்றி அடிக்கடி நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றமையால், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி விளிம்பு நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

கிழக்கின் உணவுக்களஞ்சியம் என பெயர்பெற்றிருந்த தேசம் இன்று அதன் செந்த மக்களுக்கே உணவளிக்க முடியாத துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த யதார்த்தத்திற்கு முகங்கொடுத்து, தேசம் அதிலிருந்து மீண்டௌ வேண்டும்.

கடந்த கால நிலைமை வேறு

வலையத்தில் உள்ள கிராமங்களின் உணவு மற்றும் நீர்வளப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே பண்டைய இலங்கையின் நீர் முகாமைத்துவக் கட்டமைப்பு நிறுவப்பட்டிருந்தது.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் நீடித்திருக்கக்கூடிய இந்த கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக மழை வீழ்ச்சி தொடர்பான முன்கணிப்பு, நீரியல் பண்புகள், மற்றும் ஸ்தல விபரங்கள் குறித்து எமது முன்னோர்கள் கொண்டிருந்த ஆழமான அறிவு பிரமிக்கவைப்பதனை அண்மைய ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளன.

[quote]இந்த ஆய்வு ஒவ்வொரு குளத்தினதும் உட்கட்டமைப்பையும் அவற்றின் விஸ்தரிப்பிற்கான சீரமைப்பையும் இணைப்பையும் கவனத்திற்கொள்ளும்[/quote]

என கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் குறிப்பிட்டார்.

பண்டைக்கால உத்வேகம்

எமது அரசர்கள் சிறு குளங்களை நிர்மாணித்து கால்வாய்கள் வழியாக அவற்றை நீர்த்தேக்கங்களுடன் இணைத்தனர். ஒவ்வொரு குழத்திற்கும் தனிப்பட்ட, பிரத்தியேகக் காரணங்கள் இருந்தன. அவை அனைத்துமே விவசாயத்திற்கு பாவிக்கப்படவில்லை. உதாரணத்திற்கு, சில குளங்கள் மிருகங்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டன. அதாவது, அந்த குளங்களின் உதவியுடன் யானை போன்ற பெரிய விலங்கினங்கள் காட்டில் அமைதியாக வாழ முடியும். அவை உணவைத் தேடியோ வேறு காரணங்களுக்காகவோ கிராமங்களுக்குள் நுழைந்து அழிவை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்காது. இது பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாக உருவான புத்தாக்க சிந்தனையாகும்.

மக்கள் சக்தி குளங்கள் தோறும் திட்டம் மல்வத்து ஓயா ஆற்றுப்பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ‘அடுக்குமுறை அமைப்புகள்” பற்றிய தௌிவான ஆய்வுடன் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த அமைப்பு மாத்திரம் 19 சிறு குளங்களை உள்ளடக்கியதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் விஞ்ஞான பூகோள படமிடலை உள்ளடக்கி, சாதகமான ஒவ்வொரு தரவுகளையும் தகவல்களையும் பதிவு செய்து தொகுக்க தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

கடந்த காலத்தில் தனி நபர்களாலும் நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுடன் தோள் நின்று, மக்கள் சக்தி குளங்கள் தோறும் திட்டம் நன்மை பயக்கும் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.

உலர் வலயங்களில் பாழடைந்த நிலையில் சிறிய குள அமைப்புகள் ஆயிரக்கணக்கில் உள்ள நிலையில், முதலில் இரண்டு குளங்கள் தொடர்பில் இந்த ஆய்வு கவனம் செலுத்தவுள்ளது. இதன் போது, அவை எவ்வாறு தொழிற்படுகின்றன, அவற்றுக்கு மீண்டும் எவ்வாறு உயிரழிப்பது என்பது குறித்து அறிந்துகொள்ள முடியும்.

மக்களின் ஒத்துழைப்புடனான இந்த முயற்சி மூலம் எமது பண்டைக்கால நீர் முகாமைத்துவ திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி, அவற்றை மீள் உருவாக்கி, மீண்டும் அவற்றின் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு பயன்பெற முடியும் என நம்புகின்றோம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்