யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

08 Dec, 2017 | 3:45 pm

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வந்த வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (07) இரவு வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்று மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்