ஜெருசலேம் தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பை எதிர்த்து இஸ்தான்புல்லில் பிரம்மாண்ட பேரணி

ஜெருசலேம் தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பை எதிர்த்து இஸ்தான்புல்லில் பிரம்மாண்ட பேரணி

ஜெருசலேம் தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பை எதிர்த்து இஸ்தான்புல்லில் பிரம்மாண்ட பேரணி

எழுத்தாளர் Bella Dalima

08 Dec, 2017 | 6:45 pm

ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு புனித நகராகத் திகழும் ஜெருசலேம் தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.

மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டார்.

அதிபர் ட்ரம்பின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமின்றி, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளும், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா போன்ற ஆசிய நாடுகளும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.

ட்ரம்பின் இந்த முடிவு உலகின் ஒட்டுமொத்த அமைதியை சீர்குலைப்பதாக உள்ளது என பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து, விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஆயிரக்கணக்கானோர் இன்று பெரும் திரளாக ஒன்றுகூடினர்.

அவர்கள் ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிராக கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்