காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன: யாழில் ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன: யாழில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

08 Dec, 2017 | 8:17 pm

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை உடனடியாக வெளியிட வேண்டும் என  வலியுறுத்தி இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட லலித் குகன், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் உடனடியான நிலைப்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னணி சோஷலிசக் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

இதில் சுமார் 150 ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதுடன், கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்