கலந்துரையாடல் தீர்வின்றி முடிவு: ரயில் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

கலந்துரையாடல் தீர்வின்றி முடிவு: ரயில் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

கலந்துரையாடல் தீர்வின்றி முடிவு: ரயில் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

எழுத்தாளர் Bella Dalima

08 Dec, 2017 | 7:54 pm

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் என்ஜின் சாரதிகள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் தீர்வின்றி முடிவடைந்துள்ளது.

இதனால் ரயில் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ். விதானகே, ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்ரம உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

நேற்று நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு 8 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதில் ரயில் சாரதிகள், நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களும் அடங்குகின்றனர்.

நாளாந்தம் இலங்கையில் 350 க்கும் அதிகமான ரயில் சேவைகள் இடம்பெறுகின்றன.

எனினும், இன்று 10 அலுலவக ரயில் சேவைகளே இடம்பெற்றுள்ளன.

கண்டி, ரம்புக்கனை, பொல்கஹவல, சிலாபம், காலி, மாத்தறை மற்றும் அவிஸ்ஸாவெலயில் இருந்து கொழும்பு கோட்டை வரையான காலை நேர அலுவலக ரயில் சேவைகள் இடம்பெற்றன.

இன்று இரவு கொழும்பில் இருந்து பயணிக்கவுள்ள அனைத்து தபால் ரயில்களும் சேவையில் ஈடுபடாது என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்