கணக்காய்வு அறிக்கை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளது: கணக்காய்வு திணைக்களம்

கணக்காய்வு அறிக்கை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளது: கணக்காய்வு திணைக்களம்

கணக்காய்வு அறிக்கை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளது: கணக்காய்வு திணைக்களம்

எழுத்தாளர் Bella Dalima

08 Dec, 2017 | 6:21 pm

அரச திணைக்களங்கள், அமைச்சுகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொடர்பிலான கணக்காய்வு அறிக்கை இம்மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான நிறுவனங்களில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கணக்காய்வு சட்டமூலத்தை சமர்ப்பிப்பதில் காலதாமதம் நிலவுவது தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இந்த விடயம் தொடர்பில் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்