ஒலுவில் கடலில் காணாமற்போயிருந்த மீனவர் சடலமாக மீட்பு

ஒலுவில் கடலில் காணாமற்போயிருந்த மீனவர் சடலமாக மீட்பு

ஒலுவில் கடலில் காணாமற்போயிருந்த மீனவர் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

08 Dec, 2017 | 5:50 pm

அம்பாறை – ஒலுவில் கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமற்போயிருந்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை கடலுக்குச்சென்ற இரண்டு மீனவர்கள் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது அலையில் சிக்குண்டனர்.

இதன்போது ஒருவர் காணாமற்போயிருந்தார்.

அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முற்பகல் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

3 பிள்ளைகளின் தந்தையான 37 வயதானவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்