இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் இரத்து

இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் இரத்து

இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் இரத்து

எழுத்தாளர் Bella Dalima

08 Dec, 2017 | 3:19 pm

புகையிரத சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு முடிவடையும் வரை அனைத்து பஸ் ஊழியர்களுக்கும் வழங்கப்பட்ட விடுமுறைகள் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பயணிகளின் நலன் கருதி மேலதிகமாக 400 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரி ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்தார்.

இதனடிப்படையில் 5600 பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், புகையிரதங்களில் மாதாந்த பருவச்சீட்டினைப் பெற்று பயணிப்பவர்கள் பஸ்களில் இலவசமாகப் பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரி ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்