அரசியல் கைதிகளை விடுவிப்பதாக உத்தரவாதமளிக்காவிடின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம்!

அரசியல் கைதிகளை விடுவிப்பதாக உத்தரவாதமளிக்காவிடின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம்!

அரசியல் கைதிகளை விடுவிப்பதாக உத்தரவாதமளிக்காவிடின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம்!

எழுத்தாளர் Bella Dalima

08 Dec, 2017 | 10:42 pm

அரசியல் கைதிகளை விடுவிப்பதாக அரசாங்கம் உத்தரவாதமளிக்காவிடின் வரவு செலவுத் திட்ட மூன்றாம் கட்ட வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் அவர்களின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு அரசினால் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் காணிகளில் தொடர்ந்தும் இராணுவம் நிலைகொண்டிருப்பது குறித்தும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஜனாதிபதியை சந்தித்த போதும் இதுவரை தகுந்த பதில் கிடைக்காமை தொடர்பிலும் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்