கல்கமுவ தல பூட்டுவா யானை கொலை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

கல்கமுவ தல பூட்டுவா யானை கொலை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

05 Dec, 2017 | 7:38 am

கல்கமுவ தல பூட்டுவா யானையை கொலை செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரனைகளை ஆரம்பித்து்ளளன.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று நேற்று (04) கல்கமுவ பிரதேசத்திற்கு சென்றதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றிலிருந்து விசாரணைகளை அந்த குழு ஆரம்பித்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பளாளர் சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

தல பூட்டுவா யானை கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்படும் வரை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான உதவி பணிப்பாளர் கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 8 பேரும் எதிர்வரும் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒரு சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளதுடன், தான் மற்றொரு சந்தேகநபருடன் சென்று இறந்த நிலையில் காணப்பட்ட யானையின் இரு தந்தங்களையும் வெட்டி எடுத்துச் சென்றதாக சாட்சியளித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்