ஏமனின் முன்னாள் அதிபர் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் பலி

ஏமனின் முன்னாள் அதிபர் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் பலி

ஏமனின் முன்னாள் அதிபர் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் பலி

எழுத்தாளர் Bella Dalima

05 Dec, 2017 | 3:36 pm

ஏமனின் 22 ஆண்டுகள் அதிபராகப் பதவி வகித்த அலி அப்துல்லா சலே, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தலைநகர் சனாவில் அரசுக்கு எதிராக ஹவுத்தி படையினர் நடத்திய தாக்குதலில் அலி அப்துல்லா சலே கொல்லப்பட்டதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல்லா கொல்லப்பட்டது குறித்து, ஹவுத்தி தலைவர் அப்துல் மாலிக் அல் அவுதி, “எங்களுடைய சிறந்த தருணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏமனில் கடந்த வெள்ளிக்கிழமை (01) கிளர்ச்சியாளர்களுக்கும் அரச படைக்கும் இடையே நடந்த மோதலில்125 பேர் கொல்லப்பட்டனர். 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயற்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

இதில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வந்த அப்துல்லா, சமீபத்தில் சவுதி கூட்டுப்படைக்கு ஆதரவு அளிக்கப் போவதாக தெரிவித்தார். இந்த நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அப்துல்லா கொல்லப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்