எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் அடிப்படை உரிமை மனு தாக்கல்

எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் அடிப்படை உரிமை மனு தாக்கல்

எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் அடிப்படை உரிமை மனு தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

04 Dec, 2017 | 7:44 pm

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஹெலப்பிரிய தர்பன் நந்தராஜா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரினூடாக கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வௌியிடப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானியை இரத்து செய்யுமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்பகமுவ பிரதேச சபை 3 உள்ளூராட்சி மன்றங்களாக பிரிக்கப்பட்டதை அடுத்து, சிவனொளிபாத மலை அமைந்துள்ள பிரதேசத்தின் சிங்கள பௌத்த அடிப்படை அற்றுப்போயுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் நல்லிணக்கத்திற்கும் தடையாக அமைந்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அம்பகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரரான நந்தராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்