இயந்திரக் கோளாறினால் மீனவர்கள் கடலில் தத்தளிப்பதாக தகவல்

இயந்திரக் கோளாறினால் மீனவர்கள் கடலில் தத்தளிப்பதாக தகவல்

எழுத்தாளர் Bella Dalima

04 Dec, 2017 | 3:40 pm

கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள 20 க்கும் அதிகமான மீனவப்படகுகள் இயந்திரக் கோளாறுக்குள்ளாகியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்தது.

இயந்திரக் கோளாறினால் மீனவர்கள் கடலில் தத்தளிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கிறிஸ்டி லால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மீனவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்காக இந்தியா மற்றும் மாலைத்தீவு கடற்கரைப் பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்பை நாடியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்தது.

இயந்திரக்கோளாறு ஏற்பட்ட படகொன்று இந்தியா நோக்கி நகர்வதாகவும் குறித்த படகுடன் தொடர்பினை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லையெனவும் கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டது.

மற்றுமொரு படகு மாலைத்தீவை நோக்கி நகர்வதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

சீரற்ற வானிலையால் இதுவரை 5 மீனவப்படகுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

30 படகுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்