இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்: தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்யூஸ் சதம்

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்: தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்யூஸ் சதம்

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்: தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்யூஸ் சதம்

எழுத்தாளர் Bella Dalima

04 Dec, 2017 | 8:42 pm

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்சலோ மத்யூஸ் ஆகியோர் சதம் அடித்தனர்.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 356 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்திய அணி வீரர்கள் இன்றைய மூன்றாம் நாள் ஆரம்பமாவதற்கு முன்னதாக ஒருவித மருந்து வில்லைகளை உட்கொண்டு மைதானத்திற்குள் பிரவேசித்தனர்.

நேற்றைய நாளில் இலங்கை அணி வீரர்கள் முக மறைப்பைப் பயன்படுத்தி விளையாடியமை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் பிரதான பேசுபொருளாக மாறியிருந்தது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில் இவ்வாறானதொரு சம்பவம் நடைபெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

எவ்வாறாயினும், மைதானத்தில் நிலவிய வளி மாசால் ரஞ்சிக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.

03 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்களுடன் இலங்கை அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.

அஞ்சலோ மத்யூஸ் மற்றும் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் ஜோடி நான்காவது விக்கெட்டுக்காக 181 ஓட்டங்களை அபாராமாகப் பகிர்ந்தது.

2 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியொன்றில் அஞ்சலோ மத்யூஸ் சதமடித்தார்.

டெஸ்ட் அரங்கில் அவர் பதிவு செய்த 8 ஆவது சதம் இதுவாகும்.

அணித்தலைவர் தினேஷ் சந்திமால் டெஸ்ட் அரங்கில் தனது 10 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

மத்திய வரிசையில் சதீர சமரவிக்ரம 33 ஓட்டங்களைப் பெற்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்